🇫🇷பிரான்ஸில் 24 மாவட்டங்களுக்கு கடும் மழை அபாயம்….!!!

பிரான்ஸில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் 24 மாவட்டங்களுக்கு மழை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையமான Météo France வெளியிட்டுள்ள தகவலின் படி 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் 3 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கையும் மேலும் 4 மாவட்டங்களுக்கு பலத்த புயல் காற்று எச்சரிக்கையும் என மொத்தம் 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கையில் Eure, Seine-Maritime, Oise, Val-d’Oise, Meurthe-et-Moselle, Yvelines, Haute-Saône, Vosges, Haute-Saône, Doubs, Jura, Ain, Pas-de Calais, Nord ,Haut-Rhin ,Landes, Gironde

ஆகிய மாவட்டங்களும் உள்ளன.