மோட்டார் சைக்கிள் சாரதிகள் பரிசில் திடீர் ஆர்ப்பாட்டம்..!!!

பரிசில் மோட்டார் சைக்கிள் சாரதிகள் திடீர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது கிட்டதட்ட 1000 பேர் வரையானவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள் மூலமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பரிஸ் 16 இல் உள்ள Avenue Foch வீதியில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள Hôtel de Ville பகுதியை வந்தடைந்தது பரிசில் மோட்டார் சைக்கிளுக்கான தரிப்பிடத்துக்கு கட்டணம் அறவிடப்படுவதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த கட்டண அறவீடுக்கு எதிராக அவர்கள் கடந்த சில வருடங்களாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது அதேவேளை ஆர்ப்பாட்டம் வன்முறைகள் அற்று இடம்பெற்றதாகவும் அறிய முடிகிறது.