ஆரியின் அட்டகாசமான பாடல் ப்ரோமோ!👌வெகு சிறப்பாக கொண்டாடும் ரசிகர்கள்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக பிக் பாஸ் காணப்படுகிறது. இம்முறை பிக் பாஸ் சீசன் 4ல் மிக திறமையாக விளையாடி வரும் போட்டியாளராக ஆரி மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

அத்தோடு, பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்லாமல், அவருக்கு வெளியிலும் பல எதிர்ப்புகள் காணப்பட்டது. எனினும் தனக்குரிய நேர் வழியில் சிறப்பாக வெற்றிநடை போட்டு வருகிறார் ஆரி. இந்த நிலையில், ஆரி நடித்த படமொன்றின் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.