நடுக்கடலில் 39அகதிகள் உயிருக்கு போராட்டம்…!!!

நடுக்கடலில் தத்தளித்த 39 அகதிகளை பிரெஞ்சு கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்பா-து-கலேயின் Boulogne-sur-Mer நகர கடற்பிராந்தியத்தில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது.

சிறிய படகு ஒன்றி அகதிகள் பயணித்த நிலையில் படகு திடீரென நடுக்கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது தேசிய கடற்படையினரின் உலங்குவானூர்திப்படை இவர்களை கவனித்துவிட்டு உதவிக்குழுவை அழைத்துள்ளதுஅதையடுத்து படகில் பயணித்த அகதிகளை கடற்படையினர் மீட்டனர்.

பிரிதானிய படையின் உலங்குவானூர்தியும் தேவைப்பட்டால் அழைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது பிரெஞ்சு கடற்படையினரின் உலங்குவானூர்திகள் கடலில் இருந்து அகதிகளை மீட்டனர் மொத்தமாக 39 அகதிகள் மீட்க்கப்பட்டனர் இதில்6 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மீட்க்கப்பட்டவர்களில் 1 மற்றும் 3 வயதுடைய சிறுவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்விரு சிறுவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அகதிகள் குறித்த மேலதிக விசாரணைகள் தெரிவிக்கப்படவில்லை.