எகிப்தில் சதிச் செயலா..! கொரோனா சிகிச்சை நிலையம் தீக் கிரை !

எகிப்து மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஏழு கொரோனா நோயாளிகள் பலியாகினா்.

மத்திய கெய்ரோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 கி.மீ (19 மைல்) தொலைவில் உள்ள எல் ஒபூரில் உள்ள மிஸ்ர் அல் அமல் மருத்துவமனையில் காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது மேலும் ஆரம்ப விசாரணைகளின்படி மின்சாரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு பணியாளர்களும் மற்றும் மருத்துவமனை பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸாா் கூறியதாவது கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள ஓபரில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது மேலும் இதில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழு கொரோனா நோயாளிகள் பலியாகினா் மற்றும் ஐந்து போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களும் மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவா்களும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்துப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா் இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று பொலிஸாா் தெரிவித்தனா்.