🔴அமெரிக்காவில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட உயரிய பதவி!

இலங்கையருக்கு அமெரிக்காவில் உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார். கலாநிதி கேப்ரியல் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.