🔴🇺🇲அமெரிக்க புலனாய்வு துறையை ஆட்டம் காண வைத்த அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா ஈடுபட்டு வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் சீனாவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படி கதையை சீனா கட்டி விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க புலனாய்வு துறை தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. ஏன் எனில் மரபணு மாற்றம் என்ற விஞ்ஞான தொழில் நுட்ப்பத்தில் உலகில் எல்லா நாடுகளையும் விட சீனாவே முன்னணியில் இருக்கிறது. இதனூடாக அதிக குளிரை தாங்க வல்ல, உயரமான, மிகவும் பலம் கொண்ட ராணுவ வீரர்களை அவர்களால் உருவாக்க முடியும். அந்த வகையில் பல மரபணு மாற்றங்களை செய்து, சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்க சீனா பெரும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.