அமெரிக்காவின் 130 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி கோர விபத்து …..!பலர் கவலைக்கிடம் …..!!!!

அமெரிக்காவின் டெக்சாஸில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் 130 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி கோர விபத்தினை ஏற்படுத்தியுள்ளன இச்சம்பவம் வியாழக்கிழமை காலை நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் காலையில் தொடர்ந்த உறைபனி மற்றும் மழையுடனான இருண்ட வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அம்பியூலன்ஸ் சேவை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் சிக்கிய மேலும் 36 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவற்றுள் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தினால் பலர் தமது வாகனங்களுக்குள்ளேயே சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.