🇫🇷பிரான்ஸில் பிரித்தானிய/தென்னாபிரிக்க கொரொனாத் தொற்று!

20ம் திகதி ஜனவரி மாதம் பிரான்சில் 131 பிரித்தானிய வைரசின் (VoC 202012/01) தொற்றும், 10 தென்னாபிரிக்க வைரசின் (501.V2) தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பொதுமக்கள் சுகாதார நிறுவனம், வாராந்தம் வழங்கும் தொற்றறிக்கையினை வியாழக்கிழமை வழங்கி இருந்தனர். இதில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தனர்.

ஆனால், இது வெறும் புள்ளி விபரம் மட்டுமே என்றும், அன்றாடக் கொரோனாத் தொற்றில் 1.5%, அதாவது அன்றாடம் 200 இற்கு மேற்பட்ட பிரித்தானிய வைரஸ் தொற்று கண்டறியப்படுவதாக, நேற்றைய தெலைக்காட்சிச் செவ்வியில், பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளமை அச்சத்தினை ஏற்படுத்துகின்றது. ஐரோப்பிய சுகாதார ஆணையம், பிரித்தானிய வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு நாடும் கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.