🔘ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தற்காலிக தடை!

முறையான விதிமுறை நடைமுறைக்கு வரும் வரை தொழிலுக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என தலிபான் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இது தற்காலிக நடைமுறை என பேச்சாளர் ஸபிஹ{ல்லா முஜஹித் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆப்கானை நிர்வகித்த போது இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயச் சட்டமாக காணப்பட்டது.

மரணத்தண்டனைகள் மற்றும் பெண்களுக்கான தடைகள் மூலம் தலிபான்கள் கடுமையாக செயற்பட்டுள்ளதாக உரிய ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.
பெண்களுக்கான உரிமை அபாய நிலையில் உள்ளதாகவும் ஆப்கானில் மனித உரிமைகள் குறித்த கண்காணிக்க நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் அங்கத்தவர்கள் வலியுறுத்தியுள்ளதாக ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிட்செல் பட்சலெட் தெரிவித்துள்ளார்.

பெண்கள் குறித்த தடைகள் மாத்திரமன்றி சிறுவர்களை படையில் சேர்த்துக்கொள்வது போன்ற செயற்பாடுகளும் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை தமது குழுவினருக்கு பெண்களுடன் எவ்வாறு பேசுவது எவ்வாறு நடந்துக்கொள்வது என்பது குறித்து பயிற்றுவிக்கவில்லை என தெரிவித்த தலிபான் பேச்சாளர்,காபுலுக்கு செல்லும் தமது பிரஜைகளை தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். காபுல் விமான நிலையத்தில் காணப்படும் பதற்ற நிலையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

தலிபான்கள் நாட்டை கைப்பற்றியதை அடுத்து வெளிநாட்டவர்கள் உட்பட ஆப்கானியர்கள் என சுமார் 50000பேர் காபுல் விமான நிலையத்தின் ஊடாக வெளியேறியுள்ளனர். தாம் பழையவற்றை மறந்துவிட்டதாகவும் பழிவாங்கும் எண்ணத்தில் தற்போது இல்லை என்றும் தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறான போதிலும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என காபுல் நிலையத்தில் முண்டியடிக்கின்றனர் ஆப்கானியர்கள்.