🔴 🇫🇷 விசேட செய்தி …!!!அரச பேச்சாளர் “Gabriel Attal “அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்ற அறிஞர் குழுவுடன் திடீர் சந்திப்பு…!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்ற வள அறிஞர் குழுவினருடனான சந்திப்பினை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கம் பேச்சாளர் Gabriel Attal கடினமான வாரங்கள் நம் முன்னே உள்ளன என தெரிவித்துள்ளார்.

இன்று காலை அரசுத் தலைவருடனான வள அறிஞர்களை சந்திப்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பேச்சாளர் மேலதிக தகவல்களை எதனையும் தெரிவிக்கவில்லைஇன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு அதிபர் வழங்க இருக்கின்ற உரையில் இது பற்றிய விரிவான தகவல்கள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.