🇫🇷 பரிசில் சாரதிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்.!!!!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை உந்துருளி சாரதிகள் பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் உருந்துருளிகளுக்கும் தரிப்பிட கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த திட்டத்தினை அறிவித்ததோடு 2022 ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து இது நடைமுறைக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த தரிப்பிட கட்டண முறையை நீக்கும் படி உந்துருளி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணி அளவில் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் Porte Dauphine இல் இருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் 4 ஆம் வட்டாரத்தில் உள்ள Hôtel-de-Ville முற்றத்தை வந்தடைந்தனர் Fédération française des motards en colère (FFMC) அமைப்பைச் சேர்ந்தவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஆன் இதால்கோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய உந்துருளி தரிப்பிட கட்டணம் மகிழுந்து தரிப்பிட கட்டணத்தின் 50% வீதமாகும் அதேவேளை மின்சாரத்தில் இயங்கும் உந்துருளிகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.