🔴 🔴 அஸ்ரா செனிக்கா தடுப்பூசி பாவிக்க திடீர் தடை விதித்த பிரான்ஸ் ,ஜேர்மன், இத்தாலி….!! தடுப்பூசி போட்டு கொன்டவர்களின் நிலைமை…?????

சற்று முன்னர் ஜேர்மனி பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள், பிரித்தானியா தயாரிப்பான ஆஸ்ரா செனிக்கா தடுப்பு மருந்தை பாவிக்க தமது நாட்டில் தடையை விதித்துள்ளது.

நோர்வே நாட்டில் சிலருக்கு ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி போட்ட பின்னர் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது இது போல நெதர்லாந்திலும் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தடுப்பு மருந்து பாதுகாப்பு அற்றது என்று கூறி இந்த 3 நாடுகளும் அதனை தடை செய்துள்ளது இன் நிலையில் பிரித்தானியாவில் மட்டும் சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்ரா செனிக்கா கொரோனா தடுப்பூசிகளை போட்டுள்ளார்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள்.

இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் ஆஸ்ரா செனிக்கா மருந்து பாதுகாப்பானது என்று அறிவித்துள்ளதோடு பிரித்தானிய மருத்துவக் கவுன்சிலும் ஆஸ்ரா செனிக்காவுக்கு ஆதாரவான கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவில் 10 மில்லியன் மக்களுக்கு போடப்பட்டுள்ள ஆஸ்ரா செனிக்கா ஊசியில் 50 பேருக்கு மட்டுமே எதிர் வினை தோன்றி இருந்தது என்ற தரவை இன்று பிரித்தானிய அரசு வெளியிட்டு இருந்தது அதிலும் ரத்த உறைவு ஏற்பட்ட நபர்களின் எண்ணிகையை பிரித்தானிய அரசு தெளிவாக இன்னும் தெரிவிக்கவில்லை.