பெண் காவல்துறை அதிகாரி ஒருவர்மீது தாக்குதல்.!!!!

பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை Champigny-sur-Marne (Val-de-Marne) இல் இடம்பெற்றுள்ளது இந்நகர காவல்நிலையத்துக்கு அருகே உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வழியை மறித்துக்கொண்டு ஒருவர் நின்றுள்ளார்.

அவரிடம் வாகனத்தை அங்கிருந்து எடுக்கும் படி பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் பணித்துள்ளார் ஆனால் 32 வயதுடைய குறித்த வாகன சாரதி அந்த கட்டளைக்கு பணியாமல் பெண் காவல்துறை அதிகாரியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டார்.

தகாத வார்த்தைகளால் அவரை திட்டி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார்.இதனால் அதிகாரி தமது சக அதிகாரிகளை அழைத்துள்ளார் இரு அதிகாரிகள் அவர்களுடன் இணைந்துகொள்ள இப்போது நிலவரம் மேலும் மோசமடைந்தது.

குறித்த சாரதி பெண் காவல்துறை அதிகாரியை தாக்கியுள்ளார் முகத்தில் பலமாக குத்தியுள்ளார் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவ இடத்துக்கு வருகை தந்த சாரதியின் சகோதரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.