பிரான்ஸில் இரு காவல்துறை அதிகாரிகளின் சடலம் மீட்பு……!!!!!

வீடு ஒன்றில் இருந்து இரு காவல்துறை அதிகாரிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது Celle-Saint-Cloud (Yvelines) நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன சாவடைந்த இருவரும் 29 மற்றும் 31 வயதுடைய தம்பதியினர் எனவும் அவர்கள் காவல்துறையினர் எனவும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் அவர்களது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது [அதிகாரி ஒருவர் தனது துணையை சுட்டுக் கொன்றுவிட்டு தாம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிய முடிகிறது]சாவடைந்த இரு அதிகாரிகளும் Hauts-de-Seine நகரில் பணிபுரிகின்றனர் என அறிய முடிகிறது.