⚫ஆஸ்திரேலியாவில் தடுப்பில் வதைபடும் ஈழத் தமிழ் அகதி!

கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரியுள்ளார். ராஜன் எனும் 48 வயதான அந்த அகதி, கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.