⚫அவுஸ்திரேலியாவில் அகதி ஒருவரின் அவலக் குரல்!

ஆஸ்திரேலியாவால் எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி: சமூகத்திற்குள் விடுவிக்கக்கோரி ஐ.நா. மனித உரிமைகள் குழு வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் குடிவரவுத் தடுப்பில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அகதி ஒருவரை சுமார் எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசு தடுத்து வைத்திருக்கிறது. இவரை சமூகத்திற்குள் விடுவிக்கக்கோரி ஐ.நா. மனித உரிமைகள் குழு ஆஸ்திரேலிய அரசினை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்த Kaveh எனும் அகதி, பல்வேறு உடல்நலன் மற்றும் மனநலன் பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் மெல்பேர்னில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

“என்னால் இனி தடுப்பில் தாக்குப்பிடிக்க முடியாது. நான் உடல்நலன் குன்றியவன். என்னால் இந்த தடுப்பில் இருந்தபடியே குணமடைய இயலாது. நான் குணமடைய விடுதலை வேண்டும். தங்களின் தயவுக்கூர்ந்த ஆதரவு வேண்டும். விடுதலை எனது நிலையை கொஞ்சம் தேற்றும்,” என அந்த அகதி குறிப்பிட்டிருக்கிறார்.