⚫சுதந்திரம் இல்லை! ஆஸ்திரேலியா அரசின் கொடூர குணம்! கலங்கி நிற்கும் அகதி!

‘ஈரானிய அரசுக்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும் ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. ஈரானில் எந்தவித மனித உரிமைகளும் இல்லை. மிக எளிமையாக மக்களை கொன்றுவிடுவார்கள். ஆஸ்திரேலிய அரசு தங்களால் முடிந்த வரை மக்களை துன்பப்படுத்தும். இதனால் தடுப்பில் உள்ள அகதிகள் அவர்களாகவே தற்கொலை செய்து கொள்வார்கள்.

இறந்த பின்பு, மனநலன் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து விட்டார் என ஆஸ்திரேலிய அரசும் கூறும். ஆனால், ஏன் அந்த மனநலன் பாதிப்பு ஏற்பட்டது என்பதை ஆஸ்திரேலிய அரசு சொல்லாது,” என்கிறார் ஈரானிய அகதியான Amin Afravi. ஈரானில் ஏற்பட்ட உயிரி அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த இவர் சுமார் 8 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.