⚫அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாட்டில் தளர்வு!

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாட்டில் தளர்வு

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,029 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 37 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர். தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளார்கள்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் நடைமுறையில் வரும் என Premier Gladys Berejiklian அறிவித்தார்.

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 80 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 41 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர்.