⚫ஆஸ்திரேலியாவில் கொரோனாவினால் இறுக்கப்படும் கட்டுப்பாடுகள்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா: NSW மாநிலத்தில் கடுமையான அபராதம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 466 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் நான்கு பேர் இறந்துள்ளார்கள். தொற்றுள்ளவர்களில் குறைந்தது 68 பேர், சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் NSW காவல்துறையுடன் கூடுதலாக 500 ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை வீரர்களும் இணைந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவார்கள் என்று Premier Gladys Berejiklian அறிவித்தார்.

சிட்னி பெரு நகரை விட்டு வெளியேற விரும்புபவர்கள் அதற்கான அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். சிட்னி பெரு நகரில் வசிப்பவர்கள் அவர்கள் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு தூரமே பயணிக்க முடியும்.