சிட்னியில் புதிய கட்டுப்பாடுகள் …!அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் பகீரங்கம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதற்காகவும் தலைநகரில் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அவுஸ்திரேயில அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உள்ளுர் தொற்றாளர்கள் பதிவாகாத நிலையில் புதன்கிழமை அன்று 147 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தினத்தன்று சிட்னி ப்ரொன்டே கடற்கரையில் இளைஞர் கூட்டம் அதிகரித்திருந்தமையை அடுத்தே இந்த புதிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே விதிமுறைகளை மீறும் பயணிகள் அறிவித்தலின்றி நாடு கடத்தப்படுவார்கள் என குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் தெரிவித்துள்ளார் நியூசவுத்வேல்ஸை அண்மித்த பகுதிகளில் புதிய வைரஸ் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கும் புதிய கட்டுபாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் வைரஸ் துரிதமாக பரவுவதற்கு இடமளிக்க போவதில்லை என நியூசவுத்வேல்ஸ் முதல்வர் க்லெட்டி பெரெஜ்கிலியன் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை முதல் ஐந்து பேர் மாத்திரம் மாத்திரமே வீடுகளில் ஒன்றுகூட முடியும் அதேபோன்று வெளியிடங்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை 50லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிட்னியிலிருந்து வருகை தருபவர்களை அவுஸ்திரேலியாவின் ஏனைய மாகாணங்கள் தடை செய்துள்ளன புத்தாண்டை வரவேற்கும் பல வானவேடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும் துறைமுகத்தில் ஒன்று கூடுவதை அதிகாரிகள் தடுத்து வருகினறனர்.

தொற்று ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து இதுவரை 28300 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 909 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.