🇫🇷பரிசில் €32.000 யூரோ Black money உடன் பொலிசாரிடம் பிடியில் ஒருவர்…! விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்..!!!!

கணக்கில் வராத ரொக்கப்பணத்துடன் பரிசில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இரவு நேர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர் அதிகாலை 4.30 மணி அளவில் rue de Courcelles வீதியில் காவல்துறையினர் சென்றுகொண்டிருக்கும் போது சந்தேகத்துக்கிடமான மகிழுந்து ஒன்று சென்றுகொண்டிருப்பதை பார்த்து அதை அடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் சாரதியை விசாரித்துக்கொண்டிருக்கும் போது மகிழுந்தின் முன் இருக்கையில் யூரோ தாள்கள் அடங்கிய பை ஒன்று இருப்பதை கண்டனர் மேலதிக விசாரணைகளில் அதில் €32.000 ரொக்கப்பணம் இருப்பதை பார்த்துள்ளனர் உடனடியாக மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.

கைதான சாரதி காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் போதை மருந்து கடத்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.