🇨🇦🇱🇰கனடா செல்லவுள்ள ஈழத்தமிழர்களினது கவனத்திற்கு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. குறித்த அறிவித்தலை அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கீழ் இருப்பர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை இலங்கையிலிருந்து செல்லும் ஈழத்தமிழர்களும் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.