⚫😳தாக்கப்பட்ட கனடா பிரதமர்! வெளிவந்த பரபரப்பு தகவல்!

கனடாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீது கல் எறியப்பட்டுள்ளது. பிரசாரத்தினை நிறைவு செய்துக்கொண்டு பஸ்ஸிற்கு திரும்பும் போது அவர் மீது ஆர்ப்பாட்டக்காரர்களால் கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் இருவர் மீதும் கல் வீசப்பட்டுள்ள போதும் அவர்களுக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

பெரும்பாண்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை எதிர்பார்த்து ஆகஸ்ட் நடுப்பகுதியில் இடைக்கால தேர்தலுக்கு ட்ரூடோ அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் கொவிட் 19 தடுப்பூசி மற்றும் ஏனைய விதிமுறைகளை எதிர்த்து அவருக்கான விருப்பு வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.

பிரசாரம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட கூடும் என்பதால் ஒரு வாரத்திற்கு முன்னர் பிரசாரம் ஒன்றை ட்ரூடோ இரத்து செய்திருந்தார். இது ஒரு அருவருப்பான செயல் என எதிர்க்கட்சி தலைவர் எரின் ஓ டுலே தெரிவித்துள்ளார்.

அரசியல் வன்முறைகளை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும்,ஊடகங்கள் மிரட்டல்கள்,துன்புறுத்தல்கள் போன்வற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றும் குறித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் 20 தேர்தலின் முக்கிய விடயமாக ட்ருடோ கொவிட் தடுப்பூசியை தெரிவித்து வந்தார்.