🌍உலக மக்கள் அதிர்ச்சியில்!வியட்நாம் அரசு விடுத்த எச்சரிக்கை!!!

உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோன வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் வெவ்வேறு வகையில் மாற்றமடைவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், வியட்நாமில் வீரியமிக்க புதிய கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காற்றில் வேகமாக பரவும் இந்த வைரஸ் வேகமாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.வியட்நாமில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நடைபெற்ற இணையவழி மாநாட்டில் சுகாதார அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.