⚫🇫🇷பிரான்ஸில் ஒரே குடும்பத்தில் மூவர் மரணம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், ஒரு வாரகால இடைவெளிக்குள் சாவடைந்துள்ளனர். இச்சம்பவம் Vosges இல் உள்ள Courcelles-sous-Châtenois எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே சாவடைந்துள்ளனர்.

முதலில் 48 வயதுடைய மகன் சிகிச்சை பலனின்றி நவம்பர் 14 ஆம் திகதி சாவடைந்திருந்தார். மறுநாள் அவரது 82 வயதுடைய தாயார் சாவடைந்துள்ளார். அதன் பின்னர் கடந்த வார சனிக்கிழமை 89 வயதுடைய அவரின் தந்தையும் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார். ஆறு நாட்களுக்குள் இந்த மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன. மூவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.