சொகுசு பேரூந்து நடத்துனருக்கு கொரோனா…!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.எழுமாற்றான சோதனையிலேயே குறித்த நடத்துனர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களிற்கு செல்பவர்கள் மீது எழுமாற்றான துரித அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, இராமகிருஷ்ண வீதி பகுதியில் இருந்து தூர இடங்களிற்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அதில் பயணிப்பவர்களிற்கு அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது