🔴🇱🇰யாழ் அரியாலை முச்சக்கர வண்டி சாரதிக்கு கொரோனா! பலர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- குருநகர் தனியார் பேருந்து நடத்துனருக்கு நேற்று முன்தினம கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் அவரது குடும்ப உறுப்பினரான, முச்சக்கர வண்டி சாரதியே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பேருந்து நடத்துனர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களிற்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் நடத்துனரின் மனைவி, மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் அவரது மகன் முச்சக்கர வண்டி சாரதியாவார். இந்நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த 20 குடும்பங்கள் நேற்றிரவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.