பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவிற்கான ஆரம்பத்தை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ , இந்திய பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உத்தியோகபூர்வமாக பயன்பாடுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆரோக்கியமான முயற்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ஏற்ப்பட்டுள்ள பேரழிவில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கான நடவடிக்கைகளை உரிய காலத்தில் இந்தியா மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.