⚫இலங்கை வரும் கொரோனா மருந்து!

கொரோனா தொற்றாளர்களுக்கான உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்ட மொல்னுபிரவீர் மாத்திரையை இலங்கைக்கும் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பூசியை அரசாங்க மருந்தக கூட்டுத்தாபனம் எடுத்து வந்த அடிப்படையில் குறித்த மாத்திரையையும் எடுத்துவர நடவடிக்கை எடுக்கமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.