பிரான்சில் ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனத் தடுப்பு ஊசிகள்….!!

பிரான்சில் கொரோனத் தடுப்பு ஊசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 100.000 இனை இந்த வார இறுதியில் தாண்டி உள்ளதாகப் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

மற்றைய நாடுகளும், சில எதிர்க்கட்சிகளும், பிரான்ஸ் மிகவும் மெதுவாகவே கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடுவதாக விமர்சித்துக் கொண்டிருந்தாலும், பிரான்ஸ் மிகவும் நிதானமாகவும், கவனமாகவும், பாதுகாப்பாகவும் கொரோனாத் தடுப்பு ஊசிகளைப் போடுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திலிருந்து, இந்தத் தடுப்பு ஊசிகளின் பயன்பாடு மிக வேகமெடுக்கும் எனவும், தாங்கள் பாதுகாப்புடன் இந்தநடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஊசி போடப்பட்டவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருதாகவும், இதுவரை எந்தவிதமான பாரிய பக்கவிளைவுகளும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமையில் இருந்து, மொடேர்னாவின் தடுப்பு ஊசிகளும் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில், கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமெடுக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.