♦️🇫🇷 பிரான்சில் கொரோனா.! தற்போதைய நிலவரம்.!!!!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.கடந்த 24 மணிநேரத்தில் 2,007 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது தொற்று வீதம் தொடர்ந்தும் 0.9% ஆகவே இருக்க இதுவரை தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,764,329 ஆக உயர்வடைந்துள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

9,392 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களின் 1.439 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 45 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர் மொத்த சாவு எண்ணிக்கை 110.935 பேராக அதிகரித்துள்ளது.

இவர்களின் 84.479 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர் தடுப்பூசி!!இதுவரை 32.251.464 பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர் இவர்களில் 18.734.028 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர்.