இலங்கையில் 3வது கொரோனா ஆபத்து,! தலைவர் உபுல் ரோஹன தெரிவிப்பு.!!!!

இலங்கையில் பண்டிகைக் காலங்களில் 3வது கொரோனா அலைக்கான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு அரசாங்கம் தகுந்த கொள்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறில்லையெனில் 3வது கொரோனா அலைக்கான ஆபத்தை எதிர்நோக்க வேண்டி வருமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் பண்டிகை காலங்களில் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் அதேநேரம் இயன்றவரை தங்களது பயணங்களை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.