🇫🇷 🔴 பிரான்ஸில் தீவிரமடையும் டெல்டா கொரொனா..!!! பல நகரங்ககள் தனிமை படுத்தலுக்குள்..!!

Landes மாவட்டத்தில் கொரோனா வைரசின் டெல்டா திரிபு வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்தது குறித்த மாவட்டத்தில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை பிரதமர் Jean Castex ஒருநாள் பயணமாக Landes நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் அங்கு கொரோனா வைரசின் ‘டெல்டா’ வைரஸ் வேகமாக பரவி வருகின்றது ஒவ்வொரு 100.000 பேரிலும் 50 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அங்கு மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.

ஏழு நாட்கள் நடவடிக்கையாக குறித்த மாவட்டம் கடுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் தேசிய அளவில் இந்த திரிபு பரவாமல் இருப்பதற்கு இந்த இறுக்கமான கட்டுப்பாடு அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார் மிக வேகமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொற்றுக்குள்ளானவர்கள் அறிகுறி தென்படுபவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட உள்ளதாகவும் மேலதிகமாக இந்த மாவட்டத்துக்கு 60.000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்தோடும் ஜூலை 1 ஆம் திகதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் நடமாடித்திரிவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.