♦️🇱🇰இலங்கையில் கடுமையாகும் பயணக்கட்டுப்பாடு!

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலத்தில் அத்தியாவசிய சேவை அனுமதிப்பத்திரம் இன்றி பயணிப்போர் தனிமைப்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவதால் பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தும் புதிய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஒருவர் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாது வாகனம் செலுத்துவதாக மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.