⚫😳🇱🇰போராட்டத்தில் போது தூக்கிச் செல்லப்பட்ட பெண்கள் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்!

பாராளுமன்ற சந்திக்கு அருகில் பத்தரமுல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக பொலிஸார் தூக்கி சென்றனர். இக் கைது சம்பவத்தில் மூன்று பெண்களும் அடங்குவர்கள். பலவந்தமாக தூக்கிச் செல்லும் போது பெண்களில் சிலரின் உடைகளும கிழிந்தன.

அவர்கள் நீதமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பொலிசாரால் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இலங்கை முழுவதும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது முல்லைத்தீவில் இலங்கை விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெண்களின் புகைப்படமே இது. அவர்களின் கிழிந்த ஆடைகளிற்கு பதிலாக விமானப்படையினர் பிஜாமா வழங்கியுள்ளனர்.