அவுஸ்திரேலியாவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரரான 73 வயதான தமிழர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த முதியவர், வயதில் குறைந்த ஒரு யுவதியை காதலிப்பதாகக் கூறி, யுவதியை , முத்தமிட முயன்றதாக கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராகப் பணிபுரிந்த அவர், கடந்த ஓகஸ்டில் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகின்றது.
அவர் மீது முன்னைய குற்றச்சாட்டுக்கள் பதிவாகாததால், டிசம்பர் 2022 வரை சமூகத் திருத்த உத்தரவில் இருப்பார் என கடந்த வாரம் அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அந்த யுவதியை கட்டிப்பிடித்து, தழுவிக்கொண்டு முத்தமிட முயன்ற அவர் தன்னைப் பற்றி பெருமையாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு யுவதியின் தொலைபேசி எண்ணை வழங்குமாறு இலங்கை முதியவர் அழுத்தம் கொடுத்ததுடன் , அந்த யுவதியின் எண்ணை பெற்று, அதற்கு குறுஞ்செய்தி மூலம் தன் காதலையும் அவர் வெளிப்படுத்தினார்.
இதனால் சங்கடமான அந்த பெண், தனக்கு ஒரு ஆண் நண்பன் இருப்பதாகக் கூறியபோதும் குறித்த இலங்கை முதியவர் யுவதியை விடாது தொல்லை கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான இலங்கையரான அந்த வயோதிப நபர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகின்றது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!