⚫🇱🇰இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்கப்படுகிறதா இலங்கை? ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கை முழுவதும் இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுவதாக இணைய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பு வெளியிட்டுள்ளது.


நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் இலங்கை முழுமையாக இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படவுள்ளதாகவும் இதற்கான முடிவினை ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும் இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் எமது ஊடகத்தின் செய்தியாளர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் வினவியபோது, பொது முடக்கம் தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும், இன்று மாலையளவில் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையை முடக்குமாறு சுகாதார தரப்பு, அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசேட கடிதம் மூலம் நாட்டை முடக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.