⚫🇫🇷இல் து பிரான்ஸில் தீவிரம்மடையும் கொரோனா தொற்று! மூடப்படும் வகுப்பறைகள்!

கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக இல் து பிரான்ஸ் பாடசாலைகளின் வகுப்பறைகள் வேகமாக மூடப்பட்டு வருகின்றன. இன்றை திங்கட்கிழமை நிலவரப்படி, 728 வகுப்பறைகள் இல் து பிரான்ஸ் பாடசாலைகளில் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.


வகுப்பறையில் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவ்வகுப்பறையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். அதுபோன்று தற்போது 728 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. கீழே உள்ள புகைப்படத்தில் மாவட்டரீதியான தரவுகள் உள்ளன.