🇫🇷இணையத்தள கடை …!பரிஸ் தீயனைப்பு படையினரின் புதிய முயற்சி…!!!!

இணையத்தளமூடாக பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை தீயணைப்பு படையினர் ஆரம்பித்துள்ளனர் கிட்டத்தட்ட 10 பொருட்கள் இந்த இணையத்தளமூடாக விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த பொருட்கள் விற்பனை மூலமாக தீயணைப்பு படையினருக்கு நன்கொடை சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது €4 யூரோக்களுடைய பேனையில் இருந்து €50 யூரோகளுடைய மேலாடை வரை இங்கு விற்பனைக்கு உள்ளது.

குறிப்பாக நினைவு பொருகள் தேநீர் குவளைகள் போன்ற பொருட்கள் கிடைக்கின்றன பரிஸ் தீயணைப்பு படையினர் கடந்த வருடத்தில் 500.000 உதவிகளை பரிஸ் மக்களுக்கு மேற்கொண்டுள்ளனர் அவர்களுக்கு நன்கொடை சேகரிக்கும் முகமாக இந்த இணையத்தள கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.