🇫🇷பிரான்ஸில் இசை நிகழ்சிக்குள் தீடீர் என உட்புகுந்த காவற்துறை….!! பல பேர் கைது…!!!

Noisiel (Seine-et-Marne) இல் நடு வீதியில் இசை நிகழ்ச்சி ஒன்றை ரப் இசைப்பாடகர் UZI ஒழுங்கமைத்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 200 இற்கும் மேற்பட்டவர்களுடன் தனது முதலாவது இசைவெட்டு அறிமுகத்தை இவர் செய்துள்ளார்.

அங்குள்ள வாகனத் தரிபிப்பிடத்தில் ஆரம்பித்த இந்தச் செயல் பின்னர வீதியிலும் புல்வெளிகளிலும் தொடர்ந்தது உடனடியாக அங்கு களமிறங்கிய காவற்துறையினர் இவர்களில் பலரிற்கு அபராதம் விதித்ததுடன் அவைரையும் கலைந்து செல்லப் பணித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் தயாரிப்பாளர் ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைவர் மீதும் விசாரணை ஆரம்பித்துள்ளது.