ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபருக்கும் கொரோனா…!!!

உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்திய தற்கொலைதாரிகளில் ஒருவருடன் தொடர்பை பேணினார் எனத் தெரிவித்து கைது செய்யப்பட்ட சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அறிவித்துள்ளது

ஹிஸ்புல்லா நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்பபடுத்தப்படவிருந்தார் எனினும் அவரை பரிசோதித்த பின்னர் அவர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சிஐடி நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹிஸ்புல்லா பல தவறான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்தார் மேலும் கடந்த 9 மாதங்களாக ஹிஸ்புல்லா மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்றறையதினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு இந்த குற்றச்சாட்டுக்களை நீதிமன்றிலேயே சமர்ப்பிக்க வேண்டு னவும் நாடாளுமன்றில் அல்லவெனவும் லக்ஸ்மன் கிரியெல்ல இதன்போது தெரிவித்தார்.