🇫🇷பிரான்ஸில் எரிவாயு விலை குறைப்பு…..! இன்று முதல்.!!!!

இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் எரிவாயு கட்டணம் குறைக்கப்படுகின்றது கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கட்டணம் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதலாம் திகதி முதல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டணம் குறைக்கப்பட உள்ளது.

Commission de la régulation de l’énergie வெளியிட்டுள்ள தகவல்களின் படி 4.1% வீதத்தால் இந்த கட்டணம் குறைக்கப்பட உள்ளது.

இதில்
சமையலுக்கு மாத்திரம் எரிவாயு பயன்படுத்துவோர்களுக்கு 1.2% வீதமும்
சமையல் மற்றும் வெந்நீருக்காக எரிவாயு பயன்படுத்துவோர்களுக்கு 2.5% வீதமும் சமையல் வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிகளுக்காக எரிவாயு பயன்படுத்துவோருக்கு 4.3% வீதமும் கட்டணம் குறைக்கப்பட உள்ளது.