தொழிற்சாலையொன்றில் ஊழியர்களுக்கு கொரோனா….!!

மீகொடயிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று 26 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏழு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்பு , மீதமுள்ள ஊழியர்களும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தொற்றுக்குள்ளான ஊழியர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுளதுடன் அவர்களுடன் நெருங்கிய வட்டாரத்திலுள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.