🇫🇷 பிரான்ஸில் பாதுகாப்பிற்காக சென்ற காவற்துறையினருக்கு பல்லை உடைத்து பரிசாக வழங்கினர்…….!!!!

பிரான்ஸில் நேற்று புதன்கிழமை மாலை இச்சம்பவம் Villeneuve-d’Ascq, (Nord) நகரில் இடம்பெற்றுள்ளது rue Yves Decugis வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது மாலை 6.40 மணி அளவில் நிகழ்வில் சில குழப்பங்கள் எழுந்ததை அடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு குழப்பம் ஏற்படுத்தியவர்களை வெளியேறும் படி பணித்துள்ளனர் ஆனால் அவர்கள் இணைந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் ஒரு அதிகாரி மாத்திரம் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார் முகத்தில் குத்தபட்டு அவரது எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளது இரு பற்கள் உடைக்கப்பட்டும் 12 இடங்களில் வெட்டுக்காயங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் முடிவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் படுகாயமடைந்த அதிகாரி மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.