🇫🇷பிரான்ஸில் இதனால்தான் கொரோனா அதிகளவில் பரவுகின்றது! வெளியான முக்கிய தகவல்!

கொரோனா அபாயம் அதிகம் என்று கூறியுள்ளர்கள் பிரான்ஸ் அறிவியலாளர்கள் சமீபத்திய ஆய்வு ஒன்றிலிருந்து , மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் கூடுவதும் , வெளியே கூட்டமாக உணவு உண்ணச் செல்வதுமதான் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது மற்றும் ஷாப்பிங் செல்வதைவிடவும் அதிக அபாயமானது என தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் Pasteur நிறுவன ஆய்வாளர்கள் , எந்த காரணிகள் கொரோனா பரவலுக்கு அதிக காரணமாக உள்ளன என்பதைக் கண்டறியும் ஆய்வு ஒன்றில் இறங்கினார்கள் எவ்வித தொழில்கள் எவ்வித போக்குவரத்து எந்த இடங்களுக்கு செல்வது அதிக அபாயத்துக்குரியது என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டார்கள் அந்த முடிவுகள் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு செல்லுதல் அதிக அபாயத்திற்குரியதாக இருப்பதாக தெரிவித்தன் இந்த ஆய்வுக்காக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3400 பேரிடமும் கொரோனா பாதிக்காத 100 பேரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில் அடிக்கடி மதுபான விடுதிகள் , உடற்பயிற்சி மையங்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்லுதல் , அதிக அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் , பொதுபபோக்குவரத்தை பயன்படுத்துவதும் கடைகளுக்கு செல்வதும் அப்படி இல்லை என்றும் தெரியவந்துள்ளது . அத்துடன் , விருந்துக்கு விருந்தினர்களை அழைப்பதும் கொரோனா பரவலுக்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும் , அந்த ஆய்வு தெரிவித்துள்ளது ஆகவே , பண்டிகை காலத்தில் இவ்விதம் கூட திட்டமிடுவோர் பாதுகாப்பான வகையில் அவற்றை செய்யவும் வயதானவர்கள் போன்ற எளிதில் அபாயத்திற்குள்ளாகும் வாய்ப்புள்ளோரை பாதுக்காக்கவும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.