🔴🇫🇷 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்தது பிரான்ஸ் …..!!!

கொரோனா வைரஸ் காரணமாக எயார் பிரான்ஸ் நிறுவனம் (Air France -KLM) பாரிய வருவாய் இழப்பை சந்தித்துள்ளது கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 59% வீதமான வருவாயினை எயார் பிரான்ஸ் நிறுவனம் இழந்துள்ளது.

மொத்தமாக 7.1 பில்லியன் யூரோக்களை இழந்துள்ளதாக இன்று வியாழக்கிழமை எயார் பிரான்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் காரணமாக விமான நிலையங்கள் முடக்கப்பட்டிருந்தமையே இந்த வருவாய் இழப்புக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியிலும் இந்த வருவாய் வீதம் சிரமமாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.