🇫🇷 பிரான்ஸ் ஊடகவியலாளரின் கேவலமான செயல் ..!! தலை குனிவைச் சந்தித்தார் பிரானஸ் அதிபர்…..!!!

சார்லி எப்த்தோ பத்திரிகையைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கினை துருக்கிய அரசு தொடுத்துள்ளது பிரான்சின் மிக பிரபலமானதும் சர்ச்சைகளுக்குரியதுமான சார்லி எப்த்தோ கேளிக்கை பத்திரிகை கடந்த ஒக்டோபர் மாதம் சர்ச்சைக்குரிய ஓவியம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் பெண் ஒருவரது ஆடையை விலக்குவது போன்று சித்தரிக்கப்பட்ட இந்த ஓவியம் பெரும் சர்ச்சைக்குள்ளானதுடன் பிரான்ஸ்-துருக்கு நாடுகளுக்கிடையே பெரும் மனக்கசப்பையையும் தோற்றுவித்தது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சார்லி எப்த்தோ பத்திரிகை சார்பாக நிற்க முரண்பாடுகள் மேலும் வலுத்தது இந்நிலையில் இந்த ஓவியத்தை வெளியிட காரணமாக இருந்த சார்லி எப்த்தோ பத்திரிகையைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர் மீது துருக்கிய அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

கேலிச்சித்திரத்தை வரைந்த ஓவியர் Alice Petit மற்றும் சார்லி எப்த்தோவின் மூன்று நிர்வாகிகளான Gérard Biard, Julien Sérignac மற்றும் Laurent Sourisseau ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கோரப்பட்டுள்ளது.