😳🇫🇷பிரான்ஸில் வரவிருக்கும் பெரும் ஆபத்து! எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்!

கொரேனாத் தொற்றானது குறைவடையாமல் ஆறாவது நாளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது இந்த மாத இறுதிக்குள் பெரும் பாதிப்பை உருவாக்கும் என பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரான்சில் தேசிய அளவில் தொற்று விகிதமானது, 100.000 பேரிற்கு 22.8 வீதம் என அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில நாட்களிற்கு முன்னர் இது 20 வீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. இருப்பினும் பல மாவட்டங்களில் தேசிய தொற்று வீதத்தின் பல மடங்குகள் அதிகரித்து வருகின்றது. தற்போது பிரான்சில் அதிகரித்துவரும் டெல்டா கொரொனா வைரசின் தொற்றினால் 20 வயது முதல் 29 வயதுடையவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சிக்குரிய தரவாக உள்ளது.