⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை! அவதானம்!

புதன்கிழமையுடன் இதுவரை இருந்த 19h00 மணி ஊரடங்கு உத்தரவானது, 21h00 மணிக்கு மாற்றமடைய உள்ளது. இது ஜுன் 9ம் திகதி 23h00 மணியாகத் தளர்த்தப்பட்டுப் பின்னர் ஜுன் 30ம் திகதி முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனாலும் சுகாதார நிலைமை சீர்கெட்டால் உடனடியாக அனைத்தும் இரத்துச் செய்யப்படும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சிற்கும், மற்றும் ஏனைய எட்டு மாவட்டங்களிற்கும் 21h00 மணி ஊரடங்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி அறிவிக்கப்பட்டு, பின்னர் 20h00 மணியாகவும் அதன் பின்னர் 18h00 மணியாகவும், அதிகரிக்கப்பட்டு, நேர மாற்றத்தின் பின்னர் அது 19h00 மணியாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.